BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

JIO BOOKING ?? HOW TO BOOKING ??

ஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலுத்த வேண்டும்?


ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.ஒரு வேளை ஜியோ ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், அருகில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ முகவர்களை நாடுங்கள். அல்லது ஜியோ.காம் (jio.com) என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது செல்போனில் இருக்கும் மை ஜியோ ஆப் மூலமாகவோக் கூட முன்பதிவு செய்யலாம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடடின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை 22ம் தேதி, நிர்வாகி முகேஷ் அம்பானி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதுதான், இந்தியர்கள் அனைவருக்கும் விலையில்லா 4ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை பூஜியம். இதற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையும் 3 ஆண்டுகளில் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த செல்போனில் இலவச தொலைபேசி அழைப்புகள் வழங்கப்படும். மாதத்துக்கு 153 செலுத்தி அளவில்லா டேட்டாக்களையும் பெறலாம். இதே போல, டேட்டாக்களுக்கு வார மற்றும் இரண்டு நாட்களுக்கான பேக்குகளும் உள்ளன.

ஜியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

2 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பகுதியில் விஜிஏ கேமரா
512 எம்பி ராம் மற்றும் 4 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் (128 ஜிபி அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம்)
2,000 எம்ஏஎச் பேட்டரி
2.4 இன்ச் ஸ்க்ரீன்

இந்த செல்போனை முன்பதிவு செய்யும் போது, ரூ.500ஐ கட்டணமாகச் செலுத்தி, ஜியோ ஃபோனை பெறும்போது மீதத் தொகையான ரூ.1000ஐ செலுத்த வேண்டும்.

இந்த செல்போனை 36 மாதங்கள் பயன்படுத்திய பிறகு, திருப்பிக் கொடுத்தால், ரூ.1,500 காப்பீட்டுத் தொகை வாடிக்கையாளருக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

Facebook Comments APPID