BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

     ''வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:தமிழக பள்ளிகளில், இதுவரை மதிப்பெண் பெறுவதற்காக மட்டும், பாடங்களை நடத்தி வந்துள்ளனர். 
தேசிய நுழைவு தேர்வு
அதனால், படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஈர்ப்புஇல்லாமல் போய்விட்டது. மேலும், தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியவில்லை.இதை, மாற்றும் வகையில், தமிழக பள்ளிகளில் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்படும்; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும். இந்த வகுப்புகளுக்கு, ஜனவரிக்குள், பாடத்திட்ட
தயாரிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மதிப்பீட்டு முறை
தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படும். பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதி மற்றும் செலவு திட்டங்கள், தேர்வு நடத்தும் முறை ஆகியவற்றுக்கும், அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்.
கருத்தறியும் கூட்டங்களில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறிய கருத்துக்கள் ஆராயப்பட்டு, அவற்றையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வர முயற்சிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID