BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

Latest Articles

NET EXAM APPLY SEP 11:

நெட்: விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி

கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும்.கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிவாய்ப்பைப் பெறுவதற்கும்,
ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.நிகழாண்டுக்கான 'நெட்' தேர்வு நவம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு சி.பி.எஸ்.இ. இணையதளம் மூலம்ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

RTE PRIVATE SCHOOL ADMISSION 25% APPLY SEP 11:

RTE : தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: செப்.11 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல் செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செப்.8) வெளியிடப்பட்ட அறிவிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில்25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

How to Improve Handwriting with Kids - Tips and Tricks for Parents

குழந்தையின் கையெழுத்தை அழகாக்குவது எப்படி?
உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும்.

குழந்தையின் எழுத்து நன்றாக இல்லை என இரட்டைக் கோடு, நான்கு கோடு நோட்டுகளை வாங்கித் தந்து, பக்கம் பக்கமாக அவர்களை எழுதச் சொல்லி வற்புறுத்தினால், அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். குழந்தையின் கையெழுத்தை அழகாக்க, முதற்கட்டமாக ஃபைன் மோட்டார் ஸ்கில் (Fine Motor Skill) எனப்படும், அவர்கள் கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்க்க வேண்டும். கை விரல்களுக்கு அடிக்கடி வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதியடைந்து, எழுத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். அது தொடர்பான பயிற்சிகளைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை குழந்தைகளுக்கு வாங்கித் தந்து, பிசைந்து விளையாட, சின்னச் சின்ன உருவங்கள் செய்யப் பழக்கப்படுத்துங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

மைதா மாவு, சோள மாவு, கோதுமை மாவு என ஏதேனும் ஒரு மாவினைப் பிசைந்து, பெரிய, அகலமான தட்டில் வைத்து, குழந்தையை அதில் ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

சில்லறைக் காசுகளை எண்ணி, அவற்றை சிறு துளையுள்ள உண்டியலில் குழந்தைகளைப் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும்; பென்சிலை வழுக்காமல் பிடித்து எழுத அவர்களின் விரல்கள் பழக்கப்படும்.

குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிமானத்தன்மை அதிகரிக்கும்.



குழந்தைகள் பேப்பர்களைக் கிழித்து பந்துபோல உருட்டி விளையாடினால், தடை போடாமல் அதை அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும். அல்லது, அக்குபஞ்சர் பந்துகளை வாங்கித் தந்தும் விளையாடச் சொல்லலாம்.

விரைவில் சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா?

விரைவில் சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா?


'நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், தமிழகத்தில், 45 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 434 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், வாகனங்களின் வகைக்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, கார் வைத்திருப்போர், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் போது, சுங்கக் கட்டணமாக மட்டும், 1,500 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. நாடு முழுவதும், இதே நிலை உள்ளதால், பலரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

2014 லோக்சபா தேர்தலின் போது, 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. பா.ஜ., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், சுங்கச்சாவடிகள் இன்னும் மூடப்படவில்லை.

இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய வாகனங்களை பதிவு செய்யும் போதே, சாலை வரி உள்ளிட்டவை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. அதன் பின்னும், சுங்கக் கட்டணம் செலுத்துவது தேவையற்றது என்ற கருத்து, வாகன உரிமையாளர்களிடம் உள்ளது. எனவே, சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Today Rasipalan 4.9.2017 |KALVIKURAL TODAY RASI PALAN:

Today Rasipalan 4.9.2017

மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கம். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

அச்சுறுத்தும் புளூ வேல்; காப்பாற்ற தமிழக அரசிடம் உதவி கோரிய 12வயது சிறுவன்!!

திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தமிழக அரசு அறிவித்துள்ள 104 என்ற
அவசர எண்ணை தொடர்பு கொண்டு தன்னை புளூ வேல் விளையாட்டியிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளான்.


 

RTI 2005 FULL GUIDE AND MODEL FORMAT:

No automatic alt text available.

LECTURES IN GOVERNMENT POLYTECHNIC GOVERNMENT POLYTECHNIC COLLEGE-PROFESSOR ECE MATERIAL-2017




LECTURES IN GOVERNMENT POLYTECHNIC  GOVERNMENT POLYTECHNIC COLLEGE-PROFESSOR ECE MATERIAL-2017
  • THANKS TO SRIMAN COACHING CENTER-POLYTECHNIC ECE UNIT 3 MATERIAL CLICK HERE

TNPSC-VAO MATERIAL AND MODEL TEST UPDATE ( DAILY )

 DATE:30.08.2017

 

TNPSC-VAO MATERIAL AND MODEL TEST UPDATE ( DAILY )

10000 TEACHERS VACANT |KA TET ANNOUNCED :

10 ஆயிரம் ஆசிரியர் வேலை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

கர்நாடக மாநில அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பட்டதாரி பிரைமரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதற்கு இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10,000

பணி: Graduate Primary Teacher

தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு

மாவட்ட வாரியான காலியிடங்கள் விவரம்:

Today Rasipalan 26.8.2017 :

Today Rasipalan 26.8.2017

மேஷம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

MBBS ADMISSION REGARDING:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர போலி இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாணவர்கள்: விசாரணை நடத்த காவல்ஆணையர் உத்தரவு:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போலியான இருப்பிடச் சான்று கொடுத்து கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்டவெளிமாநிலங்களில் படித்த தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

FREE COACHING FOR INSURANCE COMPANY POST:

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உதவியாளர் பணி: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி

யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள 1500 உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு சென்னையில் நடக்க உள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
இலவச பயிற்சி வகுப்புகள்

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை கடந்த 2011 முதல் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் 12 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

MBBS BDS ADMISSION REGARDING:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குபொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: மருத்துவக் கல்லூரிகளில் சேர 1,029 பேர் அனுமதிகடிதம் பெற்றனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான முதல்நாள் கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்தவர்கள் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் இருந்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்.
மொத்தம் 1,029 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 14 மாணவர்கள்கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றனர்.

ONAM CHENNAI DISTRICT LOCAL HOLIDAY:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு செப். 4 உள்ளூர் விடுமுறை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப். 4 (திங்கள்) அன்று சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதனை ஈடுசெய்யும் வகையில் செப். 23 (சனி) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.

NEET LEE ENTRANCE EXAM COACHING CENTRE EDUCATIONAL DISTRICT WISE:

கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் - கல்வித்துறை திட்டம்

'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., --- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு முடிவு அடிப்படையில், நேற்று கவுன்சிலிங் துவங்கியது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் மத்தியில், போட்டி, நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

TEACHERS TRAINING AND NEW SYLLABUS REGARDING:

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்; ஏழு ஆண்டு கள் பழமையான, 1 - 10ம் வகுப்பு வரையிலான, பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன.
இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட் டையன் தலைமையில், உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்டத்துக்கான கலைத்திட்டக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.

Government Employees Strikr and Salary Regarding:

ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு:

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட், 22ல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்று, விடுப்பு வழங்கப்படாது எனவும், பணிக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

Government School 11th Admission Related News:

மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 1990-ல் பிறப்பித்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுமதுரை ரத்தினபுரத்தைச் சேர்ந்த டி.ஆரோக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் சேர்க்கையில், குறிப்பாக கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1990-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

Today Rasipalan 25.8.2017 :

Today Rasipalan 25.8.2017

மேஷம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா