BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

NEET LEE ENTRANCE EXAM COACHING CENTRE EDUCATIONAL DISTRICT WISE:

கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் - கல்வித்துறை திட்டம்

'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., --- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு முடிவு அடிப்படையில், நேற்று கவுன்சிலிங் துவங்கியது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் மத்தியில், போட்டி, நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக மாணவர்கள், மத்திய - மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகள்,நுழைவுத்தேர்வுகளை, எதிர்கொள்ளும் வகையில், 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய, வினா வங்கி தொகுப்பு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

இதுதவிர, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வு எழுத, விருப்பமுள்ள மாணவர்களை வழிநடத்த, கல்வி மாவட்டத்துக்கு ஒரு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்ட அறிவு இருந்தால் தான், போட்டித்தேர்வை எதிர்கொள்ள முடியும்.
எனவே, பேராசிரியர்கள், துறை வல்லுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரால், வார இறுதி நாட்களில் பயிற்சிகள் அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
« PREV
NEXT »

Facebook Comments APPID