BREAKING NEWS
latest

728x90

d"/>

468x60

TEACHERS TRAINING AND NEW SYLLABUS REGARDING:

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்; ஏழு ஆண்டு கள் பழமையான, 1 - 10ம் வகுப்பு வரையிலான, பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன.
இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட் டையன் தலைமையில், உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்டத்துக்கான கலைத்திட்டக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.
கருத்துக் கேட்பு:


இந்த குழு, புதிய பாடத்திட்ட தயாரிப்புகளில் ஈடு பட்டுள்ளது. தற்போது,மண்டல வாரியாக கருத் துக் கேட்பு கூட்டம் நடத் தப்படுகிறது.

இந்நிலையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மட்டுமின்றி, மாணவர் களுக்கான ஆய்வகம் அமைத்தல், நுாலகம் அமைத் தல், அதில் இடம் பெற வேண்டிய புத்தகங்கள் குறித்த விதிகள் என, உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும், கல்வியாளர் கள் குழு, வழிகாட்டுதலை வழங்க உள்ளது.

அதே போல், புதிய பாடத்திட்டப்படி, மாணவர்களுக் கான புத்தகம் தயாரிப்பதுடன், அதை கற்பிக்கும் முறைக்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி என, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. புதிய திட்டத்திலான பாடங்களை, எந்த விதமாக கற்றுத் தர வேண்டும் என விளக்கும், கற்பித்தல் வழிமுறை புத்தகமும் தயாரிக்க, பள்ளிக்கல்வித்

துறை முடிவு செய்துள்ளாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


முழு வேகம்:

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் பொறுப்பு வகிப்பார் என, அரசு அறிவித்துள்ள நிலையில், இத்துறையின் செயலராக இருந்த உதய சந்திரன், தற்போது, புதிய பாடத்திட்டத்திற்கான செயலராக மட்டும் பணியாற்றுவார். உதய சந் திரன் வருகையில்,புதிய பாடதிட்ட பணி, முழு வேகம் எடுக்கும் என, எதிர்பார்க்கபடுகிறது
« PREV
NEXT »

Facebook Comments APPID